Wednesday, August 10, 2011

பூண்டு மருத்துவம்


பூண்டு மருத்துவம்


இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம். 

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும். இரவில் படுக்க போகும் முன் பூண்டு விதைகளைப் போட்டுக் காய்ச்சி பூண்டையும், பாலையும் சாப்பிட்டால் விடாது இருமல் வருவது நிற்கும். அலர்ஜியால் ஏற்படும் இருமல் உடனடியாக நிற்கும். இரத்தக்காயம் ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும், சம அளவு அரைத்து காயத்தில் வைத்துக் கட்டினால் ஒட்டிக்கொள்ளும், காயம் ஆறின பின் தானாகவே அது விழுந்துவிடும்.

பூ‌ண்டு வெறு‌ம் சமைய‌ல் பொரு‌ள் அ‌‌ல்ல



நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். 

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

வெள்ளைப் பூண்டு















மருத்துவக் குணங்கள்:

  1. வியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.
  2. பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.
  3. ஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.
  4. பல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.
  5. நான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.
  6. பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
  7. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.
  8. பூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.
  9. ரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்

நோய் தீர்க்கும் பூண்டு



பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.

மருத்துவ குணங்கள்: இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியற்வையை பெருக்கும்,உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும்,சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும்.

உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும்.நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.

சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது

உபயோகிக்கும் முறை:

தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.

சுளுக்கு : வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.

தேமல் : வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.

இரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

இளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.

அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

குறிப்பு:

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.

ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.
அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

பூண்டு மருத்துவப் பயன்கள் -: bksureshv@gmail.com



பூண்டு.





1.   மூலிகையின் பெயர் -: பூண்டு.
2.   வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3.   தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4.   தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.
5.   பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

6.   .வளரியல்பு -: வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப் பூண்டு என்றே பலரும் கூறுவர். இதை நடுவதற்கு  நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள். இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான் மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத் தயாரிக்கிரார்கள். நாட்டுவைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

7.   மருத்துவப் பயன்கள் -: பூண்டு நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக்  குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும்  மருந்தாகும்.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.

பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், எருக்கிலை சாறு 100 மி.லி. ஆமணக்கு நெய் ஒரு லிட்டர் சேர்த்துக் காய்ச்சி வடிக்கவும். இதனை மூட்டு வலி, வீக்கம், வாதம், நரம்பு வலிக்கும் பூசலாம்.

கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேணடும்.

பூண்டைப் பாலாவியில் வேக வைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பனங்கருப்பட்டியும் தேனும், சுக்குத் தூளும் போட்டு இளகலாகச் செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு சாபிபிட வேண்டும். வயிற்று வலி, வாய்வுக் கோளாறு யாவும் குணமாகும்.

பூண்டை வதக்கி வற்றல் கழம்பு வைத்துச் சாப்பிட குளிர் தொல்லை நீங்கும்.

இதன் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

எந்த ரூபத்தில் பூண்டை உண்டாலும் கபத்தை வெளியேற்றும், மலத்தை இளக்கும்.

பூண்டுச் சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் எங்கேனும் சுளுக்கு எற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு மறையும்.

பூண்டுரசம் கபத்தை நீக்கும்.

குப்பபைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்திடும்.

பூண்டு வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள் நாக்கில் தடவ உள் நாக்கு வளர்ச்சி குறையும்.

பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிடக் கீல்வாதம் குணமாகும்.

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்துத் தின்றால்—தீடீரென ஏற்படும் வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும்.

வெள்ளைப் பூண்டு, வெற்றிலை இரண்டையும் அரைத்து தேமல் மீது பூசினால் மறைந்து விடும். அது போல் தொடை இடுக்கிலுள்ள கக்கூஸ் படை மீது தடவி வர அதுவும் குணமாகிவிடும்.

பூண்டை அரைத்துக்  கரைத்து வீட்டின் முன் பகுதி, பின் பகுதிகளில்  தெளித்திட்டால் நல்ல பாம்பு வராது.

பூண்டை வெல்லம் கலந்து சாப்பிட்டால் உடல் வலி மறையும்.

பூண்டுடன் சிறிது ஓமத்தை நசுக்கிப்போட்டு கசாயம் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளின் வாந்தி, கொட்டாவி குறையும்.

வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி, பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க—குழந்தைகளின் மாந்தம் குறையும், சளித் தொல்லையும் குறையும்.

வெள்ளைப் பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவைகளைச் சம அளவு எடுத்து, நன்கு அரைத்து, நல்லெண்ணையில் கலந்து, காய்ச்சி நன்கு சிவந்து வரும்போது இறக்கி விடவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள் காயத்தின் மீது பூசினால் ஆறிவிடும்.

பூண்டுத் தைலத்தை உடலில் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் நமச்சில், அரிப்பு மறையும்.

பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.

ஒரு வெள்ளைப் பூண்டு, ஏழு மிளகு, ஒன்பது மிளகாய் இலை—இவைகளைச் சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டால் குளிர் காச்சல் போய்விடும்.

பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.

பூண்டைப் பொடி செய்து தேனில் குழைத்து தலை, புருவத்தில்—பூச்சிவெட்டு முடிவளராமல் இருக்குமிடத்தில் தேய்த்து வர முடி வளரும்.

பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.

அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

பச்சைப் பூண்டை உண்பதால் உடல் பலம் பெறும். உற்சாகம் ஏற்படும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி மறையும், புளிப்பால் உண்டாகும் எரிச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் குறையும்.

பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணிக் கீரை மூன்றையும் அரைத்துக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட சோகை நோய் குணமாகும்.

பூண்டை நசுக்கி சுண்ணாம்பு நீரில் நனைத்துக் கட்ட நகச்சுற்றி குறையும்.

பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.

காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.

பூண்டு, மிளகு, துத்தி இலைகளை ஒவ்வொன்றும் 50 கிராம் வீதம் எடுத்து, இத்தோடு 15 கிராம்  வசம்பு சேர்த்து நன்றாக அரைத்துப் பெண்கள் சூதக காலத்தில் சாப்பிட சூதக வலி வராது.

பூண்டை நெய்யில் வறுத்து, உணவு உண்ணும் போது சாதத்தில் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட வாய்வுத் தொல்லை மறையும்.

பூண்டுச்சாற்றை டி.பி. நோயாளிகள் பருகி வந்தால் டி.பி. குறையும்.

பூண்டு



மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.





பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது.

இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு (உணர்வைத் தூண்டுவதால், சில மதங்களில், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்று கட்டுபாடு உண்டு), மற்றும் இதன் வாடையினால், சிலர் இதை உண்பதில்லை.

உங்களுக்கு எந்த விதமான் கட்டுபாடோ அல்லது பூண்டின் மீது வெறுப்போ இல்லையென்றால், தினமும் தவறாது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், பல கொடிய நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக் கொள்ளலாம். 

"வருமுன் காப்போம்".

பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்


bksureshv@gmail.com


பூண்டுக் குழம்பு, பூண்டு ரசம்



பூண்டு மிக நல்லது. அரு மருந்து.

நம் உடம்பை சுத்தப்படுத்துவதில் பூண்டு பெரும்பங்கு
வகிக்கிறது. வாரம் ஒரு முறை பூண்டை சமையலில்
சேர்த்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

மிளகின் குணத்தை பற்றி சொல்ல ஒரு பழைய சொலவடை
போதும். ”4 மிளகை கையில் எடுத்துக்கொண்டு எதிரி
வீட்டில் கூட சாப்பிட போகலாம் ”என்பார்கள்.

விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.
பூச்சிக்கடி போன்ற எந்த விஷக்கடிக்கும் முதலில்
மிளகைத்தான் திங்கக் கொடுப்பார்கள்.

நாம் முதலில் பார்க்கப்போவது பூண்டு,மிளகு ரசம்.

செய்வது எளிது.

தேவையான சாமான்கள்:

4 பல் பூண்டு, தக்காளி 2, மிளகு 1/4 ஸ்பூன்,
சீரகம் 1/4 ஸ்பூன், எண்ணைய் 1 ஸ்பூன்,கடுகு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டு பல், மிளகு சீரகத்தை முதலில் மிக்ஸியில்
போட்டு பொடிக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து
சுற்றினால் நன்கு பேஸ்டாக வரும்.

அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணைய்
1 ஸ்பூன் சேர்த்து சூடானதும், கடுகுதாளித்து,
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன்
அரைத்து வைத்துள்ள தக்காளி, பூண்டு பேஸ்டை
சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு
கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை
சேர்த்தால் ரசம் ரெடி.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.



பூண்டு, மிளகுக் குழம்பு.




தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தக்காளி 1/4 கிலோ.
தேங்காய் துருவல் அல்லது கொப்பரைத்தூள் 1 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்,
தனியாத்தூள் 1 ஸ்பூன்
ந.எ - 1 ஸ்பூன்,
உப்பு, மஞ்சள் தூள் தேவைக்கேற்ப.

செய்முறை:
பூண்டை உரித்து கொள்ளவும்.

சின்ன வெங்கயாத்தையும் நன்கு உரித்துக்கொள்ளவும்,

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து
அதில் மிளகு சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து பிரட்டி
அடுப்பை அனைக்கும் முன் தேங்காய்த்துருவல்
சேர்த்து ஆற விட்டு மைய பேஸ்டாக
அரைத்துக்கொள்ளவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

குக்கரில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு, கறிவேப்பிலை தாளித்து
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்துவதக்கி,
அரைத்துவைத்துள்ள பேஸ்டையும் போட்டு,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 1 கிளாஸ்
தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வெயிட் போடவும்.

3 விசிலுக்கு பிறகு இறக்கி ஆற வைத்து
திறந்தால் கம கமக்கும் பூண்டு, மிளகுக்குழம்பு ரெடி.